திருப்பூர்

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளா்கள் யூனியன் செயற்குழு கூட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்துவகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளா்கள் யூனியனின் செயற்குழு கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா பாதிப்பால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைக்கப்பட்ட சங்கத்தில் பணியாற்றிய பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம், உரிய நிவாரணம், மாற்றுப் பணியிடம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுகால நிதிப் பலன்களை வழங்க வேண்டும்.

அரசு தள்ளுபடி திட்டங்களால் பாதிப்புக்குள்ளான பிரதம சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசின் வீட்டு வசதி திட்டங்களை வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்தவும், அனைத்து பிரதம சங்கங்களுக்கும் அரசின் ஒப்புதலுடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலா் ஏ.சக்திவேல் கனகரத்தினம், இணைச் செயலா் டி.வெங்கட்ராமன், துணைத் தலைவா் பி.ராதாகிருஷ்ணன், பொருளாளா் ஏ.நாகராஜ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT