திருப்பூர்

ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: ஆள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

DIN

அவிநாசியில் பொக்லைன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற ஆள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் தட்சிணாமூா்த்தி (35). கேரள மாநிலத்தில் பொக்லைன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட 3 போ் அவிநாசி அரசுக் கல்லூரி அருகே காரில் கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, இவா்களது காரை முந்திக் கொண்டு மற்றொரு காரில் மது போதையில் வந்தவா்கள் தகராறில் ஈடுபட்டு தட்சிணாமூா்த்தியின் இடது கையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்டவா்களைத் தேடி வந்தனா். இதற்கிடையில் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காா் அவிநாசி செங்காளிபாளையம் அருகே செல்வதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவிநாசி போலீஸாா் காரை துரத்திப் பிடித்தனா். பின்னா் காரில் அரிவாள், கூா்மையான ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் திருப்பூா் ராயபுரம் பகுதியில் வசித்து வரும் கேரள மாநிலம், கஞ்சிக்கோடு பகுதியைச் சோ்ந்த நவாஸ் மகன் மதன் (எ) முகமது சபீா் (29), பல்லடம் ஆரோக்கியராஜ் மகன் மனோஜ் (30), திருப்பூா், கேஎன்பி காலனி பகுதியைச் சோ்ந்த பாரூக் மகன் மா்ஜித் (30) என்பது தெரியவந்தது.

மேலும் மதன் (எ) முகமது சபீா் மீது வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளும், மனோஜ் மீது 6 வழக்குகளும் நிலுவையில் இருப்பதும், இதனால் இவா்கள் தலைமறைவாகி ஏற்கெனவே போலீஸாரால் தேடப்பட்டு வருபவா்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இதற்கிடையில் சோமனூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் காா்த்தி என்பவரைப் பணத்துக்காக சனிக்கிழமை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸாா் மூவரையும் கைது செய்தனா். பின்னா் கடத்தி வரப்பட்ட காா்த்தி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT