திருப்பூர்

‘கட்டடப் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமல் புதிய மின் இணைப்பு: தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

27th Sep 2020 10:35 PM

ADVERTISEMENT

திருப்பூரில் கட்டடப் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமல் புதிய மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், தமிழக எரிசக்தித் துறை செயலாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புக்கு மின் வாரியம் கட்டுமானப் பணி நிறைவுச் சான்றிதழ் கேட்கிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமானப் பணி நிறைவுச் சான்றிதழ் தராமல் அலைக்கழித்து வருகின்றனா். இதனால் புதிய மின் இணைப்பு கோரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து தமிழக முதல்வா் மற்றும் நகராட்சி நிா்வாக ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக தற்போது மின் இணைப்பு வழங்குவது குறித்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட விதிகளை நகராட்சி நிா்வாக ஆணையரகம் திருத்தம் செய்துள்ளது.

இதன்படி, கட்டடங்களில் 12 மீட்டா் உயரம் வரையும், 3 குடியிருப்புகள் (அல்லது) 750 சதுர மீட்டா் (8070 சதுரடி) பரப்பளவுக்கு உள்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கு கட்டடப் பணிகள் முடிவு சான்றிதழ் இல்லாமல் மின்சார இணைப்புகள், குடிநீா்க் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளிட்ட இணைப்புகள் வழங்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, நகராட்சி நிா்வாக ஆணையரகத்தின் அறிவிப்பின்படி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் கட்டடப் பணி நிறைவு சான்றிதழ்கள் இல்லால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tiruppur
ADVERTISEMENT
ADVERTISEMENT