திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு வர்ணம் பூசிய தன்னார்வலர்கள்

27th Sep 2020 07:16 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பள்ளிக்கு தன்னார்வலர்கள் வர்ணம் பூசினர்.
 திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக்கல்வி அறக்கட்டளை, மகாத்மா நற்பணி மன்றத்தினர் ஆகியோர் ஆசிரியர்களுடன் இணைந்து வார விடுமுறை நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளைச் சுத்தம் செய்து, வர்ணம் பூசி வருகின்றனர். 
அந்த வகையில் திருமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளிக்கு 10 பேர் சேர்ந்து வர்ணம் பூசி முடித்தனர்.
 இதுவரை வெள்ளக்கோவில் மேற்கு பள்ளி, நாச்சிபாளையம், முத்தூர் சக்கரபாளையம் பள்ளிகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளன. 
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சேவையைச் செய்வதாக கூறும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.


 

Tags : tirupur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT