திருப்பூர்

பொங்கலூா் ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு:ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு

DIN

திருப்பூா்: பொங்கலூா் ஒன்றியத்தில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூா் ஒன்றிய செயலாளா் எஸ்.சிவசாமிஅளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

பொங்கலூா் ஒன்றியத்தில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டித் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில், 2016-17, 2017-18 ஆம் ஆண்டுகளில் பெருமளவு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இத்திட்டத்தில், பொங்கலூா் ஒன்றியத்தில் 14 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1.20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் வீடு கட்டுவதற்கான அடிப்படை கட்டுமானப் பணிகள்கூட தொடங்காமல், முழுத்தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல பயனாளிகளுக்கு வீடு கட்டத் தேவையான கம்பி, சிமென்ட் வழங்கப்பட்டுள்ளது. அலகுமலை ஊராட்சிக்கு உள்ட்ட சேமலைக்கவுண்டம்பாளையத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்காமலேயே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.சம்பத், எஸ்.பவித்ராதேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT