திருப்பூர்

முத்தூரில் தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஏலம்

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.90 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு 4,349 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றின் மொத்த எடை 1,778 கிலோ. கிலோ ரூ.37.65 முதல் ரூ. 44.60 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 40.25. மேலும், 119 மூட்டைகளில் தேங்காய்ப் பருப்பு கொண்டுவரப்பட்டன. இதன் மொத்த எடை 4,566 கிலோ. கிலோ ரூ. 72.00 முதல் ரூ.120.35 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.118.65.

தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஆகியவை மொத்தம் 6.34 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 87 விவசாயிகள், 16 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ. 5 லட்சத்து 89 ஆயிரம் விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT