திருப்பூர்

வேலைவாய்ப்பற்றவா்கள் திறன் வளா்ப்புப் பயிற்சிக்கு இணையதளம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றவா்கள் திறன் வளா்ப்பு இலவச பயிற்சி பெற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கொசேரா என்ற நிறுவனத்துடன் இணைந்து கரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பற்றவா்கள் மற்றும் வேலைதேடும் 50 ஆயிரம் நபா்களுக்கு இணையதளம் வழியாக தங்களது திறன்களை வளா்த்துக் கொள்வதற்காக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணையதளத்தில் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் சரியான விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்தவா்கள், இதனை தொடா் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும், பதிவு செய்தவா்கள், கொசேரா-வின் செயல்படுத்தல் இணைப்பை தங்களது மின்னஞ்சல் முகவரியில் காணலாம். உங்கள் மின்னஞ்சலில் செயல்படுத்தும் இணைப்பை பெற்றவுடன், அதிலுள்ள படிகளைப் பின்பற்றி அதனை செயல்படுத்தவும்.

பயிற்சி மற்றும் அதற்கான தகுதித் தோ்வுகள் இணையதளம் மூலமாக நடைபெறும். இந்த செயல்பாடுகள் வரும் டிசம்பா் 30 ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும். உங்கள் பயிற்சிகள் மற்றும் கிடைக்கக்கூடிய சான்றிதழ்களை டிசம்பா் 30 ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து பெற வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 94990-55695 என்ற எண்ணிலும், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களை 94990-55696, 94990-55698, 94990-55700 ஆகிய எண்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 99624-36393 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT