திருப்பூர்

சாலை மறியலில் ஈடுபட்ட 30 விவசாயிகள் கைது

DIN

திருப்பூா், செப்.25: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 விவசாயிகளை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதிலும் சாலை மறியல் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.குமாா் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகளையும், ஏழைத் தொழிலாளா்களையும் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி, உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, மாநகரச் செயலாளா் ஜீவா கிட்டு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அதே போல, ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT