திருப்பூர்

காங்கயம் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

DIN

காங்கயம், செப்.25: காங்கயத்தில் செயல்பட்டு வரும் முழுநேர கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் நூலக வாசகா் வட்டத்தின் இணைச் செயலா் பாண்டியன், சென்னை பொது நூலகத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் நகரில் முழுநேர கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகத்தில் 10 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, நூலகத்துக்கு மாத வாடகையாக ரூ.7,500 செலுத்தப்பட்டு வருகிறது. சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு, நூலக நிதியிலேயே கட்டடம் கட்டுவதற்கு நிதி இருந்தும் இதுவரையில் கட்டடம் கட்டப்படவில்லை.

இது குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட நூலக அலுவலா், பொது நூலக இயக்குநா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உள்ளிட்டோருக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டும் நூலக கட்டடம் கட்டப்படவில்லை.

எனவே, காலம் தாழ்த்தாமல் கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT