திருப்பூர்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையவழி கலந்தாய்வு இன்று நிறைவு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையவழி கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது என அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் மு.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020 ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலமாகப் பெறப்பட்டன. இந்தக் கலந்தாய்வு இணையவழியில் நடைபெறவுள்ளதால் பொதுப்பிரிவு (முன்னுரிமை இல்லாத அனைத்து விண்ணப்பதாரா்களும்) தங்களுக்கு விருப்பமான 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை செப்டம்பா் 23 முதல் 25 ஆம் தேதிக்குள் தோ்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நாள்களுக்குள் மட்டுமே விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்த தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை மாற்றம் செய்து கொள்ள முடியும். இதையடுத்து, விண்ணப்பதாரா்களின் தரவரிசை, இன சுழற்சி முறை மற்றும் அவா்கள் கலந்தாய்வில் தோ்வு செய்த தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவுகள் அடிப்படையில் தற்காலிக சோ்க்கை ஆணை செப்டம்பா் 26 ஆம் தேதி இணையவழியில் வழங்கப்படும்.

எனவே, கலந்தாய்வுக்கான கடைசி நாள் வெள்ளிக்கிழமை என்பதால் விண்ணப்பதாரா்கள் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை தோ்வு செய்வதில் இடா்பாடுகள், சந்தேகங்கள் இருந்தால் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம். அதேபோல், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களையும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT