திருப்பூர்

சிவன்மலையில் பெண் விவசாயிகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு திட்ட முகாம்

23rd Sep 2020 05:38 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் நலிவடைந்த பெண் விவசாயிகளுக்கான நீடித்த நிலைத்த வாழ்வாதார ஊக்குவிப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஈரோடு, சீமா சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சீமா இயக்குநர் எஸ்.புஷ்பநாதன் தலைமை வகித்தார். இந்த இந்த நிகழ்ச்சியில் சிவன்மலை கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் அரசு வேளாண் திட்டங்கள் குறித்து காங்கயம் உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் விளக்கிக் கூறினார். சிறு குறு விவசாய தொழில்கள் மற்றும் நீர் மேலாண்மை குறித்து வேளாண்மைத்துறை பேராசிரியர் ஆர்.எம்.சுப்பிரமணியன் எடுத்துரைத்தார். புதிய விவசாய தொழில் வாய்ப்புகள், ஆடு மற்றும் மாடு வளர்ப்பு பற்றியும் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், சிவன்மலை ஊராட்சித் தலைவர் கே.கே.துரைசாமி, ஆத்மா திட்டத்தின் உதவி திட்ட மேலாளர் ஹரிப்ரியா உளப்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT