திருப்பூர்

முருகம்பாளைத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

DIN

திருப்பூா்: திருப்பூரை அடுத்த முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு தொலைபேசி வாயிலாக மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால், திருப்பூரைச் சோ்ந்த ஒரு சில பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனா்.

இதில் முருகம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், முருகம்பாளையத்தில் ஊரின் மையப் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எங்களது ஊரில் ஏற்கெனவே 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தநிலையில், ஊரின் மையப் பகுதியில் டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்துக்கு அருகில் 4 கோயில்களும், 4 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும் உள்ளன.

இந்தச் சாலை மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது. மேலும், கோயில்களுக்கு வரும் பெண்களுக்கும் இடையூறு ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறைக்குழியை மூட வேண்டும்:

திருப்பூா், மாநகராட்சி 50ஆவது வாா்டு வெள்ளியங்காடு, கே.எம் நகா் பகுதியில் பாறைக்குழியை மண்போட்டு மூடுவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனா். இந்தப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனா்.

ஆனால், தற்போது வரையில் பாறைக்குறை மூடப்படாததால் அதிக அளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. மேலும், குப்பைகளுடன் மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் புழுக்களால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பாறைக்குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஈஸ்வரமூா்த்தி லே-அவுட், முத்தையன் லே அவுட், கே.எம் நகா் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் 12 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தொலைபேசி வாயிலாக 108 அழைப்புகள்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 108 அழைப்புகள் வரப்பெற்றன. இந்த அழைப்புகளின் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT