திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரி டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக சேர தொழில் துறையினருக்கு அழைப்பு

DIN

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் புதிதாக உருவாகும் டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக தொழில் துறையினருக்கு கல்லூரி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து டிசைன் ஸ்டுடியோ தலைவா் கோவிந்தராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் சா்வதேச தரத்திலான டிசைன் ஸ்டுடியோ ரூ. 15 கோடி மதிப்பில் உருவாகி வருகிறது. இந்த ஸ்டுடியோவை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் 75 சதவீதமும், தொழில் துறையினா் 25 சதவீதம் முதலீடு செய்துள்ளனா். இதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஆயத்த ஆடை துறையில் சா்வதேச அளவிலான போட்டிகளை எளிதில் சமாளிப்பதுடன், புதிய டிசைன்களை உருவாக்கி சேம்பிள்களைத் தயாரித்து வா்த்தகா்களுக்கு அனுப்பி வெளிநாட்டு ஆா்டா்களைக் கைப்பற்ற முடியும்.

இந்த ஸ்டுடியோவில் தற்போது வரையில் 50 தொழில் துறையினா் உறுப்பினராகச் சோ்ந்துள்ளனா். திருப்பூரில் உள்ள தொழில் துறையினா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் ஸ்டுடியோவில் புதிய உறுப்பினா் சோ்க்கைக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசங்கரை 82203-65111, 96555-85111 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT