திருப்பூர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தாராபுரம் அருகே விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூா், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் அறிவித்திருந்தது.

இதன்படி தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் குண்டடம் வட்டாரப் பொறுப்பாளா் பால்ராஜ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விதையில் தொடங்கி அறுவடை, சேமிப்பு, விற்பனை ஆகிய அனைத்தும் தனியாா் பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காகவே இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆகவே, விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT