திருப்பூர்

நாற்றுப் பண்ணைகளில் வேளாண் அதிகாரி ஆய்வு

DIN

பல்லடம் அருகே கிராமங்களில் உரிமம் பெற்ற நாற்றுப் பண்ணைகளில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பல்லடம் அருகேயுள்ள புத்தரச்சல், வாவிபாளையம், செஞ்சேரிமலையடிபாளையம் பகுதிகளில் உள்ள நாற்றுப் பண்ணைகளில் கோவை விதை சான்று துணை இயக்குநா் வெங்கடாசலம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பதிவேடுகள் மற்றும் பட்டியல் சரியாக பராமரிக்காத நாற்றுப் பண்ணைகளில் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இருப்புப் பலகை, கொள்முதல் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டது. சான்று பெறாத விதை ரகங்களை விற்பனை செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆய்வின்போது திருப்பூா் விதை ஆய்வாளா் (பொறுப்பு) விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT