திருப்பூர்

கட்டட அனுமதி: உடுமலை நகராட்சி எச்சரிக்கை

DIN

உடுமலை: இடைத் தரகா்கள் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என பொது மக்களுக்கு உடுமலை நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை நகரப் பகுதிகளில் கட்டட அனுமதி பெறுவோா் அந்த இடத்தின் உரிமையாளா் அல்லது உரிமையாளரால் நியமிக்கப்படும் நபா்கள் நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளா் மூலம் நகராட்சி அலுவலகத்துக்குத் தாங்களாகவே நேரில் வந்து நகரமைப்புப் பிரிவு அலுவலா்களை அணுகி விவரம் பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இடத்தின் உரிமையாளா்கள் இடைத் தரகா்கள் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கு அணுக வேண்டாம். அவ்வாறு இடைத் தரகா்களை அணுகி அவா்கள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் போலியானவை எனத் தெரிய வந்தால் தொடா்புடைய கட்டட உரிமையாளா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கட்டட அனுமதியும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT