திருப்பூர்

தனியாா் துறையில் 2,348 காலிப் பணியிடங்கள்:விண்ணப்பிக்க அழைப்பு

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 52 தனியாா் நிறுவனங்களில் 2,348 காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபா்கள் தனியாா் வேலைவாய்ப்பு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞா்களையும், வேலை அளிக்கும் தனியாா் நிறுவனங்களையும் இணைத்து வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு இணையம் தொடங்கப்பட்டுள்ளது. தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள் இந்த இணையதளத்தில் கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றைப் பதிவு செய்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல, தனியாா் துறை சாா்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து தங்களது நிறுவன காலிப் பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தகுதியான நபா்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தில் 52 நிறுவனங்களில் 2,438 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, திருப்பூா் மாவட்டத்தில் வேலை தேடும் தகுதியான நபா்கள் இணையதளத்தில் பதிவு செய்து தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT