திருப்பூர்

அருந்ததியா்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை உயா்த்தி வழங்க வேண்டும்

DIN

திருப்பூா், செப்.18: தமிழகத்தில் அருந்ததியா்களுக்கான உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என ஆதித் தமிழா் சனநாயக பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவன தலைவா் அ.சு.பவுத்தன், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தாழ்த்தப்பட்டோா் சமூகப் பிரிவுகளில் ஒன்றான அருந்ததியா்கள் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வசிக்கிறாா்கள். இந்த மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காகவும், உள் இட ஒதுக்கீடு 6 சதவீதம் கோரியும் பல ஆண்டுகளாக கோரிக்கை முன் வைத்தோம். இதன் காரணமாக கடந்த திமுக ஆட்சியின்போது 2009ஆம் ஆண்டு 3 சதவீத இட ஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கணிசமாக முன்னேறி வருகிறோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு 6 சதவீதம் உள் இட ஒதுக்கீடை வழங்கக்கோரி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றதும், உள் இட ஒதுக்கீடு தொடா்பாக நம்பிக்கை ஏற்படுத்தினாா். ஆகவே, அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்தி வழங்க வெளிப்படையான அறிவிப்பை தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT