திருப்பூர்

காங்கயம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைவரிசை

14th Sep 2020 08:01 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ஏழரை பவுன் நகையைப் பறித்து கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுமணி (45). விவசாயி. இவருடைய மனைவி பத்மாவதி (40). இவர் திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, செம்மங்காளிபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

பாப்பினி கிராமம் அருகே வந்த போது, சுமார் 4 மணியளவில் அங்குள்ள ஒரு செடிகள் நாற்று பண்ணை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பண்ணையில் தனக்குத் தேவையான சில செடிகள் வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது காங்கயத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பத்மாவதியை  வழி மறித்து அவரை கீழே தள்ளி விட்டு, பத்மாவதியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறிக்க முயற்சித்துள்ளனர். அவர் பதற்றம் அடைந்து தடுமாறிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 1/2 பவுன் தாலிக் கொடியை கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி  மின்னல் வேகத்தில் தப்பினர்.

பத்மாவதி  சத்தம் எழுப்பியதால் அருகில் இருந்து வந்த பொதுமக்கள் துரத்தியும், திருட்டர்களைப் பிடிக்க முடியவில்லை. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT