திருப்பூர்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர், தாராபுரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

8th Sep 2020 05:21 PM

ADVERTISEMENT

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர், தாராபுரத்தில் திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் அங்கேரிபாளைம் வெங்கமேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற திமுகவினர், "தமிழகத்தில் கரோனா பாதிப்பு காலத்தில் நடைபெற உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இணையவழி வகுப்புகளை அரசு முறைப்படுத்த வேண்டும்." என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாநகர மாணவரணி அமைப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தாராபுரத்தில் தாராபுரம் அண்ணா சிலை முன்பாக திமுக மாணவரணி, இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர் லைமை வகித்தர். இதில், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளார் கே.என்.பாப்பு கண்ணன், மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பிரபாவதி, சரஸ்வதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT