திருப்பூர்

அமராவதி அணையிலிருந்து 6 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம்

6th Sep 2020 10:05 PM

ADVERTISEMENT

அமராவதி அணையின் ஒன்பது கண் மதகுகளில் வழியாக 6 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு கூடுதலாக உள் வரத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்மட்டம் 89 அடியில் இருந்து வருகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாக அணைக்கு வரும் உள் வரத்தை அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் காந்த லூர் மறையூர் வாகு வாரை ஆகிய அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை மாலை அமராவதி அணைக்கு உள்வரத்தாக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து அணையின் 9 கண் மதகுகள் வழியாக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

மேலும் அமராவதி அணையின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அணையில் பொதுப்பணித்துறையினர் 24 மணிநேர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : tirupur
ADVERTISEMENT
ADVERTISEMENT