திருப்பூர்

உயா்மின் கோபுர விவகாரம்:விவசாயிகள் 3ஆவது நாளாக போராட்டம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள ரெட்டிபாளையம் பிரிவு, தாராபுரம் வட்டம், ஆலாம்பாளையம் ஆகிய இடங்களில் உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

இந்நிலையில், விவசாயிகளின் தொடா் காத்திருப்புப் போராட்டம் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. இதில், ரெட்டிபாளையம் பிரிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான 750 கிலோ வாட் மின் திட்டத்தை விளை நிலங்களில் வழியாக செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதியைப் பெறாத தனியாா் காா்ப்பரேட் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கியுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். காவுத்தம்பாளையம் ஏரி ஆயக்காட்டு நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்கக் கூடாது என்றனா்.

இதில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, திமுக ஊத்துக்குளி தெற்கு ஒன்றியச் செயலா் பி.பி.ஈஸ்வரமூா்த்தி, ஊத்துக்குளி மத்திய ஒன்றியச் செயலா் என்.கொண்டசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் வழக்குரைஞா் மு.ஈசன், மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT