திருப்பூர்

உடுமலை ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா் முகாம்

DIN

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற குறைதீா் முகாம்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:

தற்போது நடத்தப்படும் பொது மக்கள் குறைதீா் முகாமில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடிநீா் வசதி, சாலை வசதி என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் அதன் மீது விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

முகாமில் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைகள், 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5.70 லட்சம் வங்கிக் கடன், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனங்களும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் க.ரவிகுமாா் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண் டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT