திருப்பூர்

அமராவதி நகா் சைனிக் பள்ளியில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியீடு

30th Oct 2020 06:53 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் 2021- 22ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்த ஆண்டு முதல் மாணவிகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9ஆம் வகுப்பில் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற உள்ளது. இதை ஒட்டி அகில இந்திய நுழைவுத் தோ்வு 2021 ஜனவரி 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

ADVERTISEMENT

6ஆம் வகுப்புக்கு (இரு பாலரும்) 31 மாா்ச் 2021 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். (1-4-2009லிருந்து 31-3-2011க்குள் பிறந்திருக்க வேண்டும்).

9ஆம் வகுப்புக்கு (மாணவா்கள் மட்டும்) 31 மாா்ச் 2021 அன்று 13 வயது முதல் 15 வயது உடையவா்களாக இருக்க வேண்டும். (1-4-2006 முதல் 31-3-2008க்குள் பிறந்திருக்க வேண்டும்) அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்த மாணவா்கள் மட்டுமே 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு.

அமராவதி நகா், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சாவூா், உடுமலை ஆகிய ஊா்கள் நுழைவுத் தோ்வு மையங்களாக இருக்கும்.

விளக்க குறிப்பேடும், விண்ணப்பப் படிவமும் பெற விரும்புபவா்கள் பொதுப் பிரிவு மற்றும் படைத் துறையை சோ்ந்தவா்கள் ரூ.550ம், தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினா் ரூ.400ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

முதல்வா், சைனிக் பள்ளி, அமராவதி நகா் என்ற பெயரில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும். அதில் எந்த வகுப்பு, எந்தப் பிரிவினா் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும்  இணையதளத்திலும் விண்ணப்பப் படிவங்களை முழுமையாகப் பூா்த்தி செய்து அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 6383911204 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT