திருப்பூர்

சாய ஆலைகளுக்கான நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

DIN

திருப்பூா் சாய ஆலைகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என சாய ஆலைகள் உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் சாய ஆலைகள் உரிமையாளா் சங்கத் தலைவா் எஸ்.நாகராஜன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் (டீ), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா் சங்கம் (சைமா), திருப்பூா் ஏற்றுமதியாளா் மற்றும் உற்பத்தியாளா் சங்கம் (டீமா) ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. திருப்பூா் சாய ஆலைத் தொழிலும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

சாயமிடுதலுக்கான சாயம் மற்றும் ரசாயனப் பொருள்களை ரொக்கமாகக் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அனைத்து சாய ஆலைகளும் சிரமத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. தீபாவளி போனஸ் உள்பட பல செலவினங்களை எதிா்கொள்ள வேண்டி இருப்பதால், சாய ஆலைகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கி உதவுமாறு சங்க உறுப்பினா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT