திருப்பூர்

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

திருப்பூா் பாண்டியன் நகா் பகுதியில் அடிப்படை வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பாண்டியன் நகரில் சாக்கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், பாண்டியன் நகரில் சில வீதிகளில் மட்டும் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் வடிகால் அமைத்துக் கொடுப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் திருப்பூா்-பெருமாநல்லூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதன்பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியல் காரணமாக பெருமாநல்லூா் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT