திருப்பூர்

பல்லடத்தில் ஊழல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

19th Oct 2020 11:42 AM

ADVERTISEMENT

பல்லடம் பத்திரப் பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் முறைகேட்டை கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதி அனைத்துக் கட்சி கட்சி சார்பில் பல்லடம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதனின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்துறை உயரதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை. 

அதனால் பல்லடம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு  ஊழல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் ராஜேந்திரகுமார், ராஜசேகரன் (திமுக), ஈஸ்வரமூர்த்தி, மணிராஜ் (காங்கிரஸ்), முத்துரத்தினம், மு.சுப்பிரமணியம்,பாலசுப்பிரமணியம் (மதிமுக), ப.கு.சத்தியமூர்த்தி, சாகுல்அமீது(கம்யூணிஸ்ட்), சுப்பிரமணியம், முத்துகுமார் (தமாகா)காளப்பட்டி பொன்னுசாமி, பாலசுப்பிரமணியம் (மதசார்பற்ற ஜனதா தளம்), ரங்கசாமி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஈசன்,பழனிசாமி(விவசாய சங்கங்கள்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

Tags : tirupur
ADVERTISEMENT
ADVERTISEMENT