திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

5th Oct 2020 02:09 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அருகிலிருந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில், திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த கோபிராஜின் மகள் வளர்மதி(36), அவரது மகள் நிர்மலா தேவி(17) என்பது தெரியவந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக தந்தை கோபிராஜ் உடல்நலக் குறைவாக பலியானார்.

இதையடுத்து, அருகில் வசித்து வந்த சாய்ராம் என்பவர் வளர்மதியையும், நிர்மலாதேவியையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகத் தெரிகிறது. மேலும், வீட்டுக்கு வந்தால் கொலை செய்து விடுவதாக அடிஆட்கள் வைத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வளர்மதி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையடுத்து, இருவரையும் விசாரணைக்காக வீரபாண்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

Tags : tirupur
ADVERTISEMENT
ADVERTISEMENT