திருப்பூர்

கரோனா பாதிப்பற்ற ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா அதிகம் பாதித்துள்ள ஊராட்சிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தற்போதைய நிலையில் கரோனா தொற்று அதிகமாக பாதித்துள்ள ஊராட்சிகள் நீங்கலாக, மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபா் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.

கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீா் சிக்கனம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் மற்றும் அவற்றுக்கான செலவினங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை தடை செய்தல், அயோடின் உப்பு பயன்பாடு மற்றும் அதன் அவசியம் பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

கிராம சபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே கிராம பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்கூறப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT