திருப்பூர்

காங்கயத்தில் நூலகத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா

1st Oct 2020 04:23 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயத்தில் உள்ள காரல் மார்க்ஸ் நூலகத்தின் 3 ஆண்டு துவக்க விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே, தீயணைப்பு நிலையம் எதிரே  உள்ள இந்த நூலகத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு நூலகத்தின் நிர்வாகி ப.கண்ணுசாமி தலைமை வகித்தார்.

இதில், காங்கயம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு.தணிகாசலம், புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பகுதி நிர்வாகிகள் கவி, ரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT