திருப்பூர்

உடுமலை வனத்தில் புலிகள் கணக்கெடுப்பு: கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கம்

DIN

உடுமலை: உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கையைக் கண க்கெடுக்க கேமராக்களை பொருத்தும் பணி சனிக்கிழமை துவங்கியது.

958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி என 6 வனச் சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் 15 முதல் 20 புலிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் புலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், உடுமலை வனச் சரகத்தில் புலிகளின் எண்ணிக்கையை கேமரா ட்ராப் முறையில் துல்லியமாக கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவைகளை புகைப்படம் எடுக்கவும் மொத்தம் 300 கேமராக்களை பொருத்த வனத் துறை முடிவெடுத்தது. இதில் புலிகள் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது, புகைப்படம் எடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களை அவ்வப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். புலிகளின் உட லில் உள்ள வரிகள் மற்றும் உடல் வடிவமைப்பைக் கொண்டு புலிகளின் எண்ணிக்கை கணக் கெடுக்கப்படும். முதல் கட்டமாக தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் கேமராக்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை துவங்கியது.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:

புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க கேமரா ட்ராப் முறை முதுமலை, சத்தியமங்கலம், முண்டந்துறை ஆகிய பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடா்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட 6 வனச் சரகத்திலும் அமல்படுத்தவும், முதலில் உடுமலை வனப் பகுதியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி உடுமலை வனப் பகுதியில் மொத்தம் 300 கேமராக்கள் அமைக்கப்படும். உடுமலை வனச் சரகத்தில் புலிகளின் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்தவுடன் அடுத்தது அமராவதி வனச் சரகத்தில் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என்றனா். மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம், உடுமலை வனச் சரக அலுவலா் தனபால், வனவா் சுப்பையன் மற்றும் வன ஊழியா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT