திருப்பூர்

அவிநாசி முன்னாள் எம்எல்ஏ காலமானார்

28th Nov 2020 07:06 PM

ADVERTISEMENT

அவிநாசி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழனிச்சாமி சனிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். 
அன்னூா் அருகே உள்ள சொக்கம்பாளையம், காந்திஜி காலனிில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழனிச்சாமி(81) வசித்து வந்தாா். இந் நிலையில் உடல்நலக்குறைவால் பழனிச்சாமி இன்று காலமானார். 
அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். மறைந்த பழனிசாமிக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனா். 
இவரது மனைவி மற்றும் ஒரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டனா். 
பழனிச்சாமி கடந்த 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் கங்கிரஸ் கட்சி சாா்பில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 
பின்பு 1980-ஆம் ஆண்டு மற்றும் 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் இவர் தோல்வியைத் தழுவினாா்.

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT