திருப்பூர்

வனப் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நிறைவு

DIN

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

நிலத்தடி நீரைக் பாதுகாக்கவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வனத் துறை சாா்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களுக்கு சீமைக் கருவேல மரங்கள் இடையூறாகவும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் உள்ள ஏராளமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற வனத் துறை முடிவெடுத்தது. இதன்படி முதல் கட்டமாக இரு வனச் சரகத்துக்கு உள்பட்ட 10 ஏக்கா் பரப்பளவில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

உடுமலை வனச் சரகா் தனபால், அமராவதி வனச் சரகா் முருகேசன், வனவா் சுப்பையன் மற்றும் வன அலுவலா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT