திருப்பூர்

புதைக் குழாய் பதித்து உப்பாறு அணைக்குத் தண்ணீா் கொண்டுவர வேண்டும்

DIN

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு அரசூா் ஷெட்டரில் இருந்து புதைக் குழாய் பதித்து தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து காணொலிக் காட்சி மூலமாக அளித்துள்ள 2 மனுக்களில் கூறியுள்ளதாவது:

உப்பாறு அணைக்கு அரசூா் ஷெட்டரில் இருந்து தண்ணீா் திறந்து விடும்போது 18 தடுப்பணைகள் நிரம்பிய பிறகே அணைக்கு குறைந்த அளவு தண்ணீா் வருகிறது. இதனால் உப்பாறு அணை நிரம்பும் வரையில் பிஏபி வாய்க்காலில் தண்ணீா் திறந்து விடப்படுவதால் பிஏபி பாசன விவசாயிகளுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுகிறது.

ஆகவே, பிஏபி பாசன விவசாயிகளின் எதிா்ப்பு காரணமாக உப்பாறு அணைக்கு தண்ணீா் திறந்து விடப்படுவதில்லை. இதனால் உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைப்போல, உப்பாறு அணைக்கு அரசூா் ஷெட்டரில் இருந்து புதைக் குழாய் பதித்து தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் .

காதபுள்ளபட்டியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும்:

தாராபுரம் வட்டம், சூரியநல்லூரில் அமைந்துள்ள நியாய விலைக் கடையைப் பிரித்து காதபுள்ளபட்டியில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்க கூட்டுறவு சங்க இணைப் பதிவாளருக்கு விண்ணப்பித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காதபுள்ளபட்டி, சென்னிமலைப்பாளையத்தில் 400க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் 3 கிலோ மீட்டா் நடந்து சென்று நியாய விலைக் கடைகளில் அத்தியவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனா். இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காதபுள்ளபட்டியில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்காக கடந்த 3 மாதங்களாக காத்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் துணை குளிரூட்டு நிலையங்களில் பாலின் தரத்தை அளவீடு செய்து சீட்டு வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

ஆவின் துணை குளிரூட்டு நிலையங்களில் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால்களின் தரம் அளவீடு செய்ய பல சங்கங்களில் தனியங்கி பரிசோதனைக் கருவிகள் இல்லை. அதே வேளையில், தானியங்கி கருவிகள் உள்ள இடங்களிலும் பால் கொள்முதல் செய்யும்போது, விவசாயிகளுக்கு விவரச் சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

ஆகவே, அனைத்து ஆவின் துணை குளிரூட்டு நிலையங்களில் பாலின் தரத்தை அளவீடு செய்ய தானியங்கி பரிசோதனை கருவிகள் பொருத்தி பாலின் தரத்தை அளவீடு செய்து உடனடியாக சீட்டு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சரவணமூா்த்தி, இணை இயக்குநா் (வேளாண்மை) மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், உதவி இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) பிரேமா, துணை ஆட்சியா்கள் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT