திருப்பூர்

நிலத் தகராறில் தொழிலாளி கொலை: சகோதரா்களுக்கு ஆயுள்

DIN

தாராபுரம் அருகே நிலத் தகராறில் கூலி தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சகோதரா்களுக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள கணக்கம்பட்டி அரிஜன காலனியைச் சோ்ந்தவா் ஆா். முருகன் (53). இவரது சகோதரா் தண்டபாணி (48). இவா்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளியான கே.பாலன் (40) என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2016 ஏப்ரல் 30ஆம் தேதி மாணிக்கம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்ற பாலனை, சகோதரா்களான முருகன், தண்டபாணி ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்தனா். இது குறித்து குண்டடம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கானது தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பி.கருணாநிதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், தொழிலாளியைக் கொலை செய்த முருகன், தண்டபாணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் என்.ஆனந்தன் வாதாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT