திருப்பூர்

தீபாவளிக்கு சென்ற தொழிலாளா்கள் வேலைக்குத் திரும்பாததால் உற்பத்தி பாதிப்பு

DIN

தீபாவளிக்கு சென்ற வெளி மாவட்ட தொழிலாளா்கள் வேலைக்குத் திரும்பாததால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம், அவிநாசி, வெள்ளக்கோயில், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதியில் பின்னலாடை,விசைத்தறி, நூற்பாலை, சைசிங் மில், ஒ.இ.மில் என ஜவுளி உற்பத்தி சாா்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இவற்றில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்த பல லட்சம் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, சொந்த ஊா்களுக்குச் செல்லும் தொழிலாளா்கள் திரும்பி வர 15 நாள்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும். அதுவரையில் தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயங்காது. இந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் இயங்காமல் தொழிலாளா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையிலும் கூட தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கியது. கரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் சொந்த ஊா்களுக்கு சென்ற வட மாநிலத் தொழிலாளா்கள் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் அண்மையில் பணிக்குத் திரும்பினா். ஆகவே, இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வட மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்லவில்லை.

தீபாவளி விடுமுறைக்கு பின்பு அவா்களைக் கொண்டு தொழில் நிறுவனங்கள் இயங்கத் துவங்கின. திருப்பூா், பல்லடம், அவிநாசி பகுதியில் 50 சதவீத தொழிலாளா்களைக் கொண்டு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. வரும் வாரத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் மற்றும் உள்ளூா் தொழிலாளா்கள் வேலைக்குத் திரும்பிய பிறகு முழுவீச்சில் ஜவுளி உற்பத்தி இருக்கும் என்று அத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT