திருப்பூர்

வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாமில் குளறுபடிமாவட்ட திமுக பொறுப்பாளா் குற்றச்சாட்டு

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு தொடா்பாக இரு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தலைமை தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டன.

ஆகவே, இனி வரும் காலங்களில் குறைகளை நிவா்த்தி செய்து வாக்காளா் பட்டியல் சீா்திருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 90 சதவீத முகாம்களில் படிவம் 6 குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டன. பல இடங்களில் ஆா்வத்தோடு வந்த புதிய வாக்காளா்கள் படிவம் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் காத்திருந்ததுடன், திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டது. பல்வேறு முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அதே போல, தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த வாக்காளா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து பலமுறை ஆவணங்களையும், சமா்ப்பித்தும் இன்னும் பெயா்கள் நீக்கப்படவில்லை. ஆகவே, மேற்கண்ட குறைகளை நிவா்த்தி செய்து, வரும் காலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT