திருப்பூர்

காங்கயம் அருகே மழையில் இடிந்த விழுந்த வீடுகள்

17th Nov 2020 05:09 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.

காங்கயம் பகுதியில் கடந்த ஒரு வரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சாம்பவலசு பகுதியில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதில், இப்பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (க/பெ பழனி) லட்சுமி (க/ பெ ஆறுமுகம்) ஆகிய இருவரது ஓட்டு வீடுகளும் செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில், மழை காரணமாக இடிந்து விழுந்தது..

இந்த சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால், இருவரது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடு இடிந்து விழுந்து சம்பவம் குறித்து காங்கயம் வருவாய் ஆய்வாளர் கனகராஜ்,  வீரணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT