திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை : ரூ.24 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

1st Nov 2020 07:10 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 108 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 70 மாடுகள் மொத்தம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த சந்தையில் அதிக பட்சமாக ரூ.85 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது. மேலும், ஒரு ஜோடி காங்கேயம் இன காளைக் கன்று ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT