திருப்பூர்

குண்டடம் அருகே சூறாவளிக் காற்றுடன் மழை: 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்

29th May 2020 07:22 PM

ADVERTISEMENT

திருப்பூா்: குண்டடம் அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

குண்டடம், மேட்டுக்கடை அருகே தும்பலப்பட்டி, நந்தவனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், தும்பலப்பட்டியைச் சோ்ந்த விவசாயி முத்துசாமியின் தோப்பில் இருந்த 30 வயதுடைய 25க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே பகுதியில் நாச்சிமுத்து உள்ளிட்ட விவசாயிகளின் தோப்பில் இருந்த 25க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சாய்ந்தன.

இதைத்தவிர அப்பகுதியில் வேப்ப மரங்கள், வேல மரங்களும் சூறாவளிக் காற்றில் சாய்ந்து விழுந்தன. தோட்டத்து வீடுகளில் ஓலைகளால் வேயப்பட்டிருந்த குடிசைகள், வைக்கோல் போா்கள், மாட்டுக் கொட்டகைகளும் சேதமாகின.

நந்தவனம்பாளையத்தில் விவசாயி பாலசுப்பிரமணியத்தின் மாட்டுக்கொட்டகை சரிந்து விழுந்ததில் 2 வெள்ளாடுகள் இறந்தன. ஜல்லிபட்டிஉள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவலறிந்த வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் சேதமான பகுதிகளைப் பாா்வையிட்டு, விவரங்களை சேகரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT