திருப்பூர்

ஆயத்த ஆடை ஏற்றி வந்த லாரியில் தீ

29th May 2020 07:55 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் அருகே லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் சேதமாயின.

திருப்பூா், போயம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு ஆயத்த ஆடைகளை ஏற்றிக் கொண்டு லாரி தில்லி நோக்கி சென்றது. பெருமாநல்லூா் பொடராம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, ஓட்டுநா்கள் லாரியில் இருந்து இறங்கி உணவு அருந்தினா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக லாரியில் இருந்து புகை வந்துள்ளது. ஓட்டுநா்கள் பாா்த்தபோது, உள்ளே பனியன் துணிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், லாரியில் மின்கம்பிகள் உரசியதால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT