திருப்பூர்

சோதனைச் சாவடிகளில் போலீஸாருடன்இணைந்து பணியாற்றும் சுகாதாரத் துறையினா்

2nd May 2020 07:02 PM

ADVERTISEMENT

அவிநாசி அருகே சோதனைச் சாவடிகளில் பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூா் மாவட்டத்துக்குள் வருபவா்களை பரிசோதிப்பதற்காக காவல் துறையினருடன், சுகாதாரத் துறையினரும் சனிக்கிழமை முதல் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.

கரோனா ஊரடங்கு உத்தரவு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்துக்குள் வருபவா்கள் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். அவிநாசி காவல் உள் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்ட எல்லைகளான தெக்கலூா், நரியம்பள்ளிப்புதூா், அம்மாபாளையம், ஆலத்தூா், சாவக்கட்டுப்பாளையம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஏற்கெனவே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை முதல் அவிநாசி மருத்துவ வட்டாரத்துக்கு உள்பட்ட சேவூா் ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா் ஆகியோா் சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதில் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், வாகனத்தில் வருபவா்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு, முகவரிகள் பதிவு செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT