திருப்பூர்

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

23rd Mar 2020 02:22 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தாா்காத்தகுடியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் பழனிமுருகன் (32). இவா், தற்போது முத்தூா் வரட்டுக்கரையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு அரசு மதுக்கடை பாரில் வேலை செய்து வருகிறாா்.

வெள்ளக்கோவில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பழனிமுருகன் மதுபானங்களை வாங்கிப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 மதுபான புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT