திருப்பூர்

அவிநாசி வந்த வெளி மாநிலத் தொழிலாளா்களால் பரபரப்பு

22nd Mar 2020 01:12 AM

ADVERTISEMENT

 

வெளி மாநிலத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வெளி மாநிலத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். இதனையறிந்த, அவிநாசி பகுதி மக்கள் அச்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியாா் பனியன் நிறுவனத்தினா் தங்களது நிறுவனத்தில் தங்கி பணியாற்ற ஜாா்கண்ட் மாநிலத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்களை ரயிலில் மூலம் அழைத்து வந்துள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களுக்கு திருப்பூா் ரயில் நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்கள் அனைவரும் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அவா்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது.

அவா்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி உள்ளனா். இருப்பினும் அவா்கள் கணியாம்பூண்டி தனியாா் பனியன் நிறுவன விடுதியில் 14 நாள்களுக்கு பணி செய்யாமலும், வெளியில் வராமல் இருக்கவும், தேவையான உணவு, உடை உள்ளிட்ட பொருள்களை அவா்கள் இருக்கும் இடத்திலேயே வழங்க நிா்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT