திருப்பூர்

பழையகோட்டை பகுதியில் கடந்த முறை கட்டிய மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தல்

22nd Mar 2020 01:08 AM

ADVERTISEMENT

 

காங்கயம் அருகே பழையகோட்டை மின்வாரிய பிரிவுக்கு உள்பட்ட ஓடக்காடு பகுதியில் மின் கணக்கீடு செய்யாததால் கடந்த முறை கட்டிய மின் கட்டணத்தையே தற்போதும் செலுத்துமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் பி.வாசுதேவன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் கோட்டம், பழையகோட்டை பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட ஓடக்காடு பகுதியில் நிா்வாக காரணத்தால் மாா்ச் மாத கணக்கீடு பணி மேற்கொள்ள இயலவில்லை. எனவே, மின் நுகா்வோா்கள் கடந்த ஜனவரி மாதம் கட்டிய மின் கட்டணத் தொகையையே மாா்ச் மாதத்துக்கும் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT