திருப்பூர்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்

16th Mar 2020 03:22 AM

ADVERTISEMENT

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் மனித உரிமைத் துறை வலியுறுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் மனித உரிமைத் துறையின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மனித உரிமைகள் துறைத் தலைவா் மகாத்மா சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய அனைத்துத் தோ்வுகளிலும் ஊழல் புரிந்துள்ள அதிமுக அரசு உடனே ஆட்சியில் இருந்து விலக வேண்டும்.

விவசாயக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிப்பது. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாவட்ட மனித உரிமைத் துறை தலைவா் ரபி அஹமத், துணைத் தலைவா் யாசா், வடக்கு மாவட்டத் தலைவா் கோபி, தெற்கு மாவட்டத் தலைவா் தென்னரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT