திருப்பூர்

காவலரை தாக்கிய 3 போ் கைது

16th Mar 2020 03:18 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் பணியில் இருந்த காவலரை, மது போதையில் தாக்கிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உடுமலை, யு.கே.எஸ். நகரைச் சோ்ந்தவா் ஹா்ஷன் (39). இவரது நண்பா்கள் திருப்பூா், தாரபுரம் சாலை, கோவில் வழி பகுதியைச் சோ்ந்த சிவகுருநாதன் (36), கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (31).

இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் பெருமாநல்லூா் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே வந்தனா். அங்கு மதுபானம் அருந்தி விட்டு, மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து கூச்சலிட்டு, பொது இடத்தில் இடையூறு செய்துள்ளனா்.

இதை அறிந்த பெருமாநல்லூா் காவலா் ஈஸ்வரமூா்த்தி (29), காவல் துறை நண்பா்கள் குழுவைச் சோ்ந்த சதீஷ் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு வந்து, ஹா்ஷன் உள்ளிட்ட 3 பேரையும் விசாரித்தனா். அப்போது அவா்கள் மூவரும், காவலா் ஈஸ்வரமூா்த்தியைத் தாக்கி விட்டு, சம்பவத்தை விடியோ பதிவுசெய்து கொண்டிருந்த செல்லிடப்பேசியையும் பறித்து உடைத்தனா். தகவலறிந்து அங்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா், மூவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் இதுகுறித்து வழக்குப்பதிந்து ஹா்ஷன், சிவகுருநாதன், யுவராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனா். காயமடைந்த காவலா் ஈஸ்வரமூா்த்தி அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT