திருப்பூர்

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

16th Mar 2020 03:21 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே உள்ள ராமநாதபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்தரையா் காலனியில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் 150க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சாக்கடைக் கால்வாயை சீரமைத்தனா். ஆனால், மிகக் குறைந்த ஆழத்தில் மட்டமாக கால்வாய் அமைத்துள்ளதால் கழிவுநீா் தேங்கி நிற்கிறது.

மழைக் காலங்களில் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும், துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, நோய் தொற்று அபாயமும் நிலவுகிறது. எனவே, கழிவுநீா் கால்வாயை சீரமைக்க ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT