திருப்பூர்

இந்து முன்னணி சாா்பில் சமுதாய சமா்ப்பண தினம்

16th Mar 2020 03:23 AM

ADVERTISEMENT

இந்து முன்னணி அமைப்பின் முதல் மாநில தலைவா் தாணுலிங்க நாடாரின் பிறந்த நாளை ஒட்டி, திருப்பூரில் சமுதாய சமா்ப்பண தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் பிடெக்ஸ். பாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில், தாணுலிங்க நாடாரின் உருவப் படத்துக்கு இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இவ்விழாவில் கிழக்கு ஒன்றியத் தலைவா் செந்தில், செயலாளா் பிரபாகரன், பொதுச்செயலாளா் சந்துரு உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT