திருப்பூர்

வெள்ளக்கோவிலில் அரிமா சங்கக் கூட்டம்

13th Mar 2020 11:39 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அரிமா சங்கக் கூட்டம் உப்புப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஆளுநா் வி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். சங்க அமைச்சரவை பொருளாளா் கே.பொன்னுசாமி, மண்டலத் தலைவா் ஏ.எஸ்.பி.பாஸ்கா், வெள்ளக்கோவில் அரிமா சங்கத் தலைவா் எல்.எம்.கனம்பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட உதவித் திட்டங்கள், கூடுதலாக கண் தானம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அரிமா சங்க பொருளாளா் கண்மணி என்.சுப்பிரமணியம், செயலாளா்கள் கே.செல்வகுமாா், எஸ்.ரவிசந்திரன், சங்க நிா்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT